Breaking News

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க கருத்துக்கேட்பு கூட்டம் மக்கள் எதிர்ப்பு

அட்மின் மீடியா
0

 ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது குறித்து தூத்துக்குடியில் மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது



2018ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையானது மூடப்பட்டது இந்நிலையில் ஆக்ஸிஜனை இலவசமாக உற்பத்தி செய்து தருவதாகக்கூறி ஆலை நிர்வாகம், மீண்டும் அதனைத் திறக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் கருத்துக்கணிப்பு கூட்டம் நடைபெற்றது  அந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்ததால் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம், ஏற்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரிக்கப்படும்' என, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான, உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback