Breaking News

அஸ்ஸாமில் பா.ஜ.க வேட்பாளரின் காரில் இவிஎம் மெஷின்: 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்.. மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவு!

அட்மின் மீடியா
0

அசாமில் பா.ஜ.க வேட்பாளரின் காரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் 4 தேர்தல் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும்

 


அஸாமில் 39 தொகுதிகளுக்கு நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் நடந்தது. பின்னர் பதார்கண்டி தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது.அவ்வாறு கொண்டு செல்லும் வழியில் அசாமின் கரீம்காஞ்ச் பகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏவும், பத்ரகாண்டி தொகுதி வேட்பாளருமான கிருஷ்னெந்து பாலின் காரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக 4 தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் பணி இடைநீக்கம் செய்து  சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback