அமமுக கூட்டணியில் SDPI கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு
06.04.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-தமிழ்நாடு(SDPI) கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-தமிழ்நாடு (SDPI) கட்சிக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-தமிழ்நாடு(SDPI) கட்சிக்கு தமிழ்நாட்டில் கீழ்காணும் ஆறு (6) சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
1. ஆலந்தூர்(28)
2. ஆம்பூர்(48)
3. திருச்சி மேற்கு(140)
4. திருவாரூர்(168)
5. மதுரை மத்தியம்(193)
6. பாளையங்கோட்டை(226)" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றப் பொதுத்தேர்தல் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-தமிழ்நாடு(SDPI) கட்சியும் கூட்டணி ஒப்பந்தம். pic.twitter.com/PG7z5tRnN0
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 11, 2021
Tags: தமிழக செய்திகள்