Breaking News

நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் ஓராண்டிற்குள் நீக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

இன்னும் ஒரு வருடத்தில் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டு ஜிபிஎஸ் முறையில் சுங்கக்கட்டண வசூல் அமலுக்கு வரும் என மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

 

இன்று நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் தற்போது 93% வாகனங்கள் பாஸ்டேக் முறையை பின்பற்ற தொடங்கிவிட்டன. மீதமுள்ள 7 சதவீத வாகனங்கள் இரு மடங்கு கட்டணத்தை செலுத்தி வருகின்றன.

இந்நிலையில் பாஸ்டேக் முறையும் அகற்றப்பட்டு ஜி.பி.எஸ் இமேஜிங் முறையில் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் இந்த முறை அமலாகும் போது, நாடு முழுவதும் தடையில்லா வாகன போக்குவரத்து சாத்தியமாகும் எனவும் அடுத்த ஒராண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் முழுமையாக அகற்றப்படும் என இந்த அவையில் நான் உறுதி கூறுகிறேன் என்று சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback