Breaking News

சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் முழுமையாக மீட்பு!

அட்மின் மீடியா
0

 எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் ஒரு வார போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளது. 


சீனாவில் இருந்து மலேசியா வழியாக நெதர்லாந்து நாட்டுக்கு சென்று கொண்டிருந்த ஜப்பான் நாட்டின் எவர் கிரின் சரக்கு கப்பல், கடந்த 23 ஆம் தேதி எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரை தட்டி நின்றது.

இதனால் அந்த வழியில் செல்ல முடியாமல் 350க்கும் மேற்பட்ட கப்பல்கள் நடுக்கடலில் தத்தளித்து வந்தன. 

இதையடுத்து, கப்பலை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. 

இந்நிலையில் சுமார் ஒருவார கால கடும் போராட்டத்திற்கு பின்னர், கப்பல் நீர்ப்பரப்புக்கு கொண்டு வரப்பட்டு தர்போது கப்பல் கால்வாய் பகுதியை கடந்து கடல் பகுதிக்கு வந்துள்ளது. இதனால் சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து நிலை சீரானது 



 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback