கொரோனா - புதிய விதிகளை வெளியிட்டது மத்திய அரசு!
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் சூழலில் மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில் மாநிலங்களுக்கு இடையே தனிநபர் நகர்வு, போக்குவரத்துக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொது இடங்கள், பணியிடங்கள், கூட்டம் நிறைந்த இடங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
PCR பரிசோதனையை 70% அளவில் மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும்
பொது இடங்கள், பணியிடங்கள், கூட்டம் நிறைந்த இடங்களில் பின்பற்றவேண்டிய நெறிமுறைகளை மாநில அரசுகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் போக்குவரத்துக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற கட்டுப்பாடுகளை மாநில அரசு தனியாக செயல்படுத்தக்கூடாது எனவும் அந்த நெறிமுறையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து இந்த வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறைக்கு வரும் எனவும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் இந்த நெறிமுறைகளும் கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது
Tags: இந்திய செய்திகள்