Breaking News

ஐபோன், நிலவுக்கு சுற்றுலா, கார், ஹெலிகாப்டர், 100 சவரன் தங்கம், வைரல் ஆகும் சுயேட்சை வேட்பாளரின் தேர்தல் அறிக்கை

அட்மின் மீடியா
0

மதுரை தெற்க்கு தொகுதி சுயேட்சை வேட்பாளர்  துலாம் சரவணன் என்பவர் அரசியல் கட்சிகளும், வாக்காளர்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகும் வகையிலான பல திட்டங்களை அறிவித்துள்ளார் அவரது அறிவிப்புகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 


தொகுதி மக்கள் அனைவருக்கும் ஐபோன், 

நீச்சல் குள வசதியுடன் 3 மாடி வீடு,

வீட்டிற்கு தலா ஒரு கார், 

100 நாள் பயணமாக நிலவுக்கு சுற்றுலா, 

தொகுதி சில்லென இருக்க 300 அடி உயரத்தில் செயற்கை பனிமலை,

தொகுதியில் விண்வெளி ஆராய்ச்சி மையம், 

ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் 

இதுதவிர, பெண்களின் திருமணத்திற்கு 100 சவரன் நகை, 

இல்லத்தரசிகளுக்கு வீட்டு வேலை செய்ய ரோபோ வழங்கப்படும் 

ஒரு ஹெலிகாப்டர், 

ஒரு படகு வழங்கப்படும் 

என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






Tags: தமிழக செய்திகள்

Share this