Breaking News

ரயிலில் இனி செல்போன் சார்ஜ் செய்ய முடியாது: ஏன் தெரியுமா?

அட்மின் மீடியா
0

இனி ரயில்களில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சார்ஜ் செய்யும் பாயிண்டுகள் அனைத்தும் அணைத்து வைக்கப்பட வேண்டும் என ரயில் பாதுகாப்பு ஆணையர் பரிந்துரை செய்துள்ளார்

 


இதனை அடுத்து இனிமேல் இரவில் செல்போன் லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியாது என்று தகவல் வெளிவந்துள்ளது. 

 

விரைவில் இந்த அறிவிப்பு தெற்கு ரயில்வே உள்பட அனைத்து ரயில்களிலும் இந்த அறிவிப்பு விரைவில் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது

இந்திய ரயில்வே நிர்வாகம் பயனர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரயிலில் தீவிபத்து ஏற்படாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கையாக இரவு நேரங்களில் ரயில் பிளக்பாயிண்ட்களில் சார்ஜ் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags: இந்திய செய்திகள்

Share this