ஆகஸ்ட் 1ல் நடைபெறுகிறது நீட் தேர்வு
அட்மின் மீடியா
0
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கான நடப்பாண்டு, 'நீட்' தேர்வு, வருகிற ஆகஸ்ட், 1ல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
எம்.பி.பி.எஸ்., மருத்துவப் படிப்பு மற்றும் பி.டி.எஸ்., எனப்படும் பல் மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக, 'நீட்' எனப்படும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை, தேசிய தேர்வு முகமை, ஆண்டுதோறும் நடத்துகிறது.நடப்பாண்டுக்கான நீட் தேர்வு, வருகிற ஆகஸ்ட், 1ல் நடைபெற உள்ளதாக, நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க
www.ntaneet.nic.in. என்ற இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம். '
விண்ணப்பிக்க வேண்டிய தேதி உள்ளிட்ட இதர விபரங்கள், விரைவில் வெளியிடப்படும்'
மேலும் இந்தாண்டு முதல் பி.எஸ்.சி நர்சிங், சித்த மருத்துவம், ஆயுர் வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கும் நீட் தேர்வு அவசியம் என தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்