திமுக கூட்டணி 177 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ்-சி வோட்டர் கருத்து கணிப்பு
திமுக கூட்டணி 177 இடங்களை வென்று ஆட்சியை பிடிக்கும் என டைம்ஸ்நவ் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் வருகிற 6ம் தேதி நடக்கிறது. அத்தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைக்க போவது யார் என்ற கருத்து கணிப்பபை டைம்ஸ் நவ் பத்திரிக்கையும் சி வோட்டர் நிறுவனம் ஆகியன இணைந்து நடத்தி உள்ளது.
அதில்
திமுக தலைமையிலான கூட்டணி 177 இடங்களில் வெற்றி பெறும் எனவும்
அதிமுக.கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெறும் எனவும்
மக்கள் நீதி மய்யம் 3 இடங்களில் வெற்றி பெறும் எனவும்
அமமுக 3 இடங்களில் வெற்றி பெறும் எனவும்
மற்றவர்கள் 2 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் கணிப்பு தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 46 சதவீத வாக்குகளும்,
அதிமுக கூட்டணிக்கு 34.6 சதவீத வாக்குகள் கிடைக்கும்
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 4.4சதவீதமும் ;
அமமுகவுக்கு 3.6 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும் என டைம்ஸ் நவ்-சி வோட்டர் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் முழு விவர கருத்து கணிப்பு முடிவுகள் தெரிந்து கொள்ள
https://www.timesnownews.com/india/tamil-nadu/article/tamil-nadu-election-opinion-poll/736700
Tags: தமிழக செய்திகள்