Breaking News

FACT CHECK: இந்தியன் ஆயிலை அதானி நிறுவனம் வாங்கியதா? சமூக வலைதளங்களில் பரவும் செய்தியின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  இந்தியன் ஆயில் நிறுவனத்தை அதானி நிறுவனம் வாங்கி இந்தியன் ஆயில் அதானி கேஸ் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது என்று  ஒரு செய்தியின் பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 






அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

இதுவரை இந்தியன் ஆயில் நிறுவனத்தை யாருக்கும் விற்க்கவில்லை,யாரும்  வாங்கவில்லை


மேலும் 

இந்தியன் ஆயில் நிறுவனம் என்பது வேறு

இந்தியன் ஆயில் அதானி கேஸ் நிறுவனம் என்பது வேறு ஆகும்


இந்தியன் ஆயில் அதானி கேஸ் பிரைவேட் லிமிடெட் என்பது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டும் அதானி கேஸ் லிமிடெடும் இணைந்து தொடங்கிய நிறுவனம் ஆகும் 

இரண்டு நிறுவனங்களும் இணைந்து புதிதாக2013 ம் ஆண்டு  இந்தியன் ஆயில் அதானி கேஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ஒன்றைத் தொடங்கி தொழில் செய்து வருவதும் தெரிந்தது


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்





Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback