Breaking News

மீண்டும் புதிய பிரைவசி பாலிசி - விரைவில் அப்டேட் வெளியிடும் வாட்ஸ்அப்

அட்மின் மீடியா
0

வாட்ஸ்அப் நிறுவனம் மேம்பட்ட பிரைவசி பாலிசிக்கான அப்டேட்டை விரைவில் வெளியிட இருப்பதாக தெரிவித்து உள்ளது.



கடந்த சில வாரங்களுக்கு முன் வாட்ஸ்அப் வெளியிட்ட புது அப்டேட்டிற்கு பெரும் எதிர்ப்பு வந்ததை அடுத்து  அந்த புது அப்டேட் பற்றி வாட்ஸ்அப் நீண்ட விளக்கம் அளித்தது. மேலும் புதிய மாற்றங்களுக்கு பயனர்கள் ஒப்புதல் வழங்க மே 15, 2021 எனும் புதிய காலக்கெடுவை பிறப்பித்தது. 

இத்துடன் வாட்ஸ்அப் தனது பயனரின் தனிப்பட்ட குறுந்தகவல், குழுக்களில் பகிரப்படும் குறுந்தகவல் உள்ளிட்டவைகளை பார்க்க முடியாது என தெரிவித்தது. இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் மேம்பட்ட பிரைவசி பாலிசிக்கான அப்டேட்டை விரைவில் வெளியிட இருப்பதாக தெரிவித்து உள்ளது.


வாட்ஸப் வெளியிட்டுள்ள அறிக்கை

https://faq.whatsapp.com/general/security-and-privacy/were-updating-our-terms-and-privacy-policy


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback