வாட்ஸ்அப்-பின் புதிய பிரைவசி கொள்கையை தடைவிதிக்க கோரிய மனு!: வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நிறுவனம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!!
கடந்த மாதம் வாட்ஸப் திடிரென புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்றும் புதிய விதிமுறைகளை ஏற்காவிடில் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியாது என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்தது மக்களின் எதிர்ப்பு காரணமாக வாட்ஸப் பயனாளர்களின் தகவல்களை வணிக நோக்கில் பயன்படுத்தும் கொள்கையை அமல்படுத்துவதை வாட்ஸ்-அப் நிறுவனம் ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட புதிய கொள்கைக்கு எதிராக டெல்லியைச் சேர்ந்த கர்மான்யா சிங் ஷரீன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது புதிய கொள்கை கொள்கை தொடர்பாக நீதிபதிகள் தங்கள் கருத்தை தெரிவித்தனர்.
அதில், தனிப்பட்ட தகவல்களை மக்கள் பெரிதாக கருதுகின்றனர், அவர்களின் நலன்களை காப்பது நமது கடமை என்று நீதிபதிகள் கூறினர்.
இதையடுத்து புதிய கொள்கை தொடர்பாக வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
Tags: இந்திய செய்திகள்