Breaking News

தமிழகத்தில் விழுப்புரம், கடலூர் புதுச்சேரியில் நள்ளிரவு கனமழை! இன்றும் மழைக்கு வாய்ப்பு

அட்மின் மீடியா
0

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.



விழுப்புரத்தில் திண்டிவனம், விக்கிரவாண்டி, கோலியனுர், திருவெண்ணைநல்லூர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. 

கடலூரில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், வடலூர், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் ஆரணி, செய்யார் உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

புதுச்சேரி, காலாப்பேட், கனகசெட்டிக்குளம், வில்லியனூர், மதகடிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரி நகரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. 

புதுச்சேரியில் பல்வேறு முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் எழும்பூர், கோடம்பாக்கம், வடபழனி, கே.கே.நகர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தண்டையார்பேட்டை, திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது.

நீலகிரி மாவட்டம் குன்னூர், மேட்டுப்பாளையம் சாலையில் மழையின் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வளி மண்டல மேலடுக்கில், மேற்கு திசை காற்றிலும், கீழடுக்கில், கிழக்கு திசை காற்றிலும் சுழற்சி ஏற்பட்டுள்ளது.இதனால், தமிழகம், புதுச்சேரியில், இன்றும், நாளையும், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback