தமிழகத்தில் 9, 11 ம் வகுப்புகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் ,அல்லது சுழற்சி முறையில் வகுப்புகள் - அரசு வழிகாட்டு நெறிமுறை
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் பத்து மாதங்களுக்குப் பிறகு 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 19ஆம் தேதி திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள், விடுதிகளும் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் பள்ளி மற்றும் விடுதிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில், சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
காலை, பிற்பகல் என வகுப்புகளை பிரித்து நடத்தவும், மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் வகுப்புகளை ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்