பிப்.7ம் தேதி தமிழகம் வருகிறார் சசிகலா! டிடிவி. தினகரன்
அட்மின் மீடியா
0
பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா பிப்ரவரி 7-ஆம் தேதி தமிழகத்திற்கு வரவுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சசிகலா, உடல்நலம் தேறியதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவனையில் இருந்து டிச.31 ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யபட்டார். மேலும் மருத்துவர்கள் அறிவுரைப்படி கொரோனா சிகிச்சைக்குப் பிறகு பெங்களூருவில் சசிகலா தனிமைபடுத்திக்கொண்டுள்ளார்
இதையடுத்து பிப்ரவரி 7-ஆம் தேதி தமிழகத்திற்கு வரவுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, சசிகலா தலைமையில் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்று கூறினார்.
Tags: தமிழக செய்திகள்