Breaking News

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ல் இடைத்தேர்தல்

அட்மின் மீடியா
0

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.

 

 


தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை புது தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டார்.

 

அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் எச்.வசந்தகுமாரின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடம் காலியாகவுள்ளது. அந்த மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback