Breaking News

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு - முதல்வர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 59இல் இருந்து 60ஆக அதிகரிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு! 

 


 கடந்த 23-ஆம் தேதி சென்னை வாலாஜாசாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. 

இதையடுத்து இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்திருந்தார். இதில், 25,26 தேதிகளில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் இன்று தொடங்கியது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

 


 

அந்த அறிவிப்பில், தமிழகத்தில் அரசு பணியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.59-ல் இருந்து 60-ஆக உயர்த்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback