இந்தியா உட்பட 20 நாடுகளில் இருந்து சவூதிக்குள் நுழைய தடை
அட்மின் மீடியா
0
இந்தியா உட்பட 20 நாடுகளில் இருந்து வரும் 03/02/2021 இரவு 9 மணி முதல் சவூதி அல்லாதவர்கள் சவூதிக்குள் நுழைய தடை.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியாக 20 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் சவூதி அரேபியாவிற்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும், அந்நாடுகளில் இருந்து வரும் டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், சவூதி குடிமக்கள், மருத்துவ பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மட்டும் சவூதிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கீழுள்ள 20 நாடுகளில் இருந்து சவுதி அரேபியா வரும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிக தடை செய்யப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.
லெபனான்,
துருக்கி,
அயர்லாந்து,
இத்தாலி,
போர்ச்சுகல்,
சுவீடன்,
சுவிட்சர்லாந்து,
அமெரிக்கா,
இந்தியா,
அர்ஜென்டினா,
பிரேசில்,
இந்தோனேசியா,
பாகிஸ்தான்
தென்னாப்பிரிக்கா
போன்ற நாடுகளில் இருந்து சவுதிக்கு அனைத்து விமானங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
Source
Tags: வெளிநாட்டு செய்திகள்