கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு மசோதா சட்ட பேரவையில் நிறைவேற்றம்
மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசு கல்வி மற்றும் நிறுவனங்களின் வேலை வாய்ப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி இன்று தாக்கல் செய்தார்.
அதன்படி, 20 சதவிகித இட ஒதுக்கீடு 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பெரும்பகுதியாக வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடும், சீர் மரபினருக்கு 7 சதவிகிதமும், மீதமுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 2.5 சதவிகிதமும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்