BREAKING ஜனவரி 13ம் தேதி முதல் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி: மத்திய அரசு
இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கொரானா தடுப்பூசி கோவாக்சின், மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு த்டுப்பூசி ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.
அதன்பிறகு கொரானா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது ஒத்திகையில் கிடைத்த கருத்துகளின்படி, அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டதிலிருந்து 10 நாள்களுக்குள் கரோனா தடுப்பூசி செலுத்த அரசு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஜனவரி 13 முதல் முதற்கட்டமாக கொரோனா முன்களப்பணியாளர்களான மருத்துவத் துறையினருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும்,
இந்நிலையில் அடுத்த 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு தயாராக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் நான்கு இடங்களில் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு மையங்கள் நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது சென்னை, மும்பை, கொல்கத்தா, கர்னல் பகுதிகளில் தடுப்பூசி பாதுகாப்பு மையங்கள் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்