சிறுநீரக கற்களை அகற்றும் ஸ்டோன் கிரஷ் டானிக் என பலரும் ஷேர் செய்யும் பதிவு உண்மையா ?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் என் பெயர் முரளி, சென்னை மடிப்பாக்கம். எனது மகன் தினேஷ்க்கு கிட்னியில் 7 mm கல் இருந்தது. எனது மகனுக்கு ஆப்ரேசன் செய்ய 50,000 ஆயிரம் செலவு ஆகும் என்று டாக்டர்கள் சொன்னார்கள். 50 ரூபாய் மட்டும் உள்ள கேவாவின் ஸ்டோன் கிரஷ் சிரப்பு சாப்பிட்டதன் மூலம் கல் யூரின் வழியாக வெளியேறி விட்டது.என்று ஒரு புகைபட்த்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி யின் உண்மை என்ன?
இந்த செய்தி பலவருடங்களாக சமூக வலைதளங்களில் வலம் வரும் செய்தி ஆகும் . பலரும் ஷேர் செய்யும் அந்த மருந்து ஓர் ஆயூர் வேத தயாரிப்பு மருந்து ஆகும் மேலும் இந்த தயாரிப்பு எந்தவொரு நோய்களுக்கும் சிகிச்சையளிக்கவோ, தடுக்கவோ, குணப்படுத்தவோ அல்லது கண்டறியவோ இல்லை. தயவுசெய்து உங்கள் சுகாதார மருத்துவரை அணுகவும் என தெளிவாக போடபட்டுள்ளது
மேலும் பொதுவாக மருத்துவர்களின் தகுந்த ஆலோசனை இல்லாமல் சமூக வலைதளங்களில் பரவும் எந்த மருந்துகளையும் எடுத்துகொள்ளாதீர்கள் எனவே உங்களுக்கு உடல் பிரச்சனை என்றால் அருகில் உள்ள மருத்துவரிடம் செல்லுங்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி