Breaking News

பயனாளர்களின் விவரங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பகிரப்பட மாட்டாது என அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் விவரங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பகிரப்பட மாட்டாது என புதிய விதிமுறைகள் குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

 


கடந்த மாதம் வாட்ஸப் திடிரென புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்றும் புதிய விதிமுறைகளை ஏற்காவிடில் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியாது என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்தது

இதையடுத்து தங்களது தனிப்பட்ட தகவல்களை வாட்ஸ்ஆப் சேமிக்கிறது என்ற அச்சத்திலும் புதிய விதிமுறைகளாலும் பலர் மாற்று செயலியை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

 

இந்நிலையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் புதிய விதிமுறைகள் குறித்து விளக்கமளித்துள்ளது. அதில்


கேள்வி: வாட்ஸ்அப் எனது பயனாளர்கள் ஒருவர்க்கு ஒருவர் பேசிக்கொள்ளும் செய்தி தகவல்களை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறதா ? 

பதில் : இல்லை. 


கேள்வி: வாட்ஸ்அப் எனது ஆடியோ / வீடியோ அழைப்புகளைப் பதிவுசெய்து கண்காணிக்குமா? 

பதில் : இல்லை. 


கேள்வி: வாட்ஸ்அப் எனது பயன்பாட்டில் நான் பகிர்ந்த புகைப்படங்கள், மீடியா கோப்புகளை அதன் சர்வரில் வைத்திருக்கிறதா ? 

பதில் :  இல்லை. 

ஆனால் பெறுநர் உங்கள் செய்தியை பெறவில்லை என்றால் மட்டுமே அது அவரிடம் சேரும் வரை 30 நாள் என்க்ரிப்ட் செய்து வைக்கப்படும், பின்னர் தானாக அழிந்துவிடும். 

வாட்ஸ்ஆப்பில் பயனாளிகளின் அழைப்புகள் மற்றும் செய்திகள் கண்காணிக்கப்படாது.

உங்களுடைய இருப்பிடம் குறித்த தகவல்கள், உங்கள் தொடர்புகள் உள்ளிட்டவை பேஸ்புக்குடன் பகிரப்படாது.

வாட்ஸ்ஆப் குழுக்கள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும்.

வாட்ஸ்ஆப் புதிய விதிமுறைகளினால் பலர் 'சிக்னல் டெலிராம் உள்ளிட்ட ஆப்புகளுக்கு மாறி வரும் சூழ்நிலையில் பயனர்களுக்காக வாட்ஸ்ஆப் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.


https://faq.whatsapp.com/general/security-and-privacy/answering-your-questions-about-whatsapps-privacy-policy

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback