வெளிநாட்டு இந்தியர்கள் தேர்தலில் வாக்களிக்கலாம் வெளியுறவுத்துறை ஒப்புதல்
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
இது நாள் வரை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படாத நிலையில் தற்போது வாக்களிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் யோசனைக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
மேலும் தேர்தல் தொடர்பான அமைப்புகளுடன் தேர்தல் ஆணையம் வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிப்பது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதனை அடுத்து இது குறித்த ஆலோசனை விரைவில் நடைபெறும் என்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் இந்தியாவில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் வாக்களிக்கலாம் என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
Tags: இந்திய செய்திகள்