இருக்கு இன்றும் மழை இருக்கு: 5 மாவட்டங்களில் கன மழை : சென்னை வானிலை ஆய்வு மையம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள் சென்னை மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் அறிக்கை
Tags: தமிழக செய்திகள்