Breaking News

பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என 11 மடாதிபதிகள் கூட்டாக அறிவித்தார்களா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  தமிழகத்தைச் சேர்ந்த 11 மடாதிபதிகள் இணைந்து இந்து விரோத பிஜேபிக்கு வாக்களிக்க கூடாது என கூட்டறிக்கை வெளியிட்டதாக ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தியில் உள்ளது போல் கூறவில்லை  கடந்த 14.03.2019 அன்று   இந்துக்களுக்காக யார் பேசுவார்கள், யார் குரல் கொடுக்கிறார்கள் என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. இந்துக்களின் ஒற்றுமையை இந்த தேர்தலில் காட்ட வேண்டும். என்று தான் 11 மாடாதிபதிகள் கூறினார்கள் 

இதன் அடிப்படையில் பா.ஜ.க கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று 11 மடாதிபதிகள் கூட்டறிக்கை வெளியிட்டதாக பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


Tags: மறுப்பு செய்தி FACT CHECK

Give Us Your Feedback