Breaking News

உங்கள் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி

அட்மின் மீடியா
0

இந்திய தேர்தல் ஆணையம் தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25 ஆம் தேதி  மின்னணு தேர்தல் புகைப்பட அடையாள அட்டையை டிஜிட்டல் வோட்டர் ஐடி)திட்டத்தை  அறிமுகப்படுத்தியது    


வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ளவர்கள், தங்களது செல்போன்  எண்ணை பதிவு செய்து வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.    

முதலில் https://nvsp.in/Account/Login -க்கு செல்லவும். 


அதில் கீழே உள்ள dont have account as a new user என்பதை கிளிக் செய்து  உள் நுழையுங்கள்


அடுத்து அதில் உங்கள் மொபைல் நம்பர்  கொடுத்து  send otp  என்பதை கொளிக் செய்து உங்கல் மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணை பதிவிடுங்கள் 


அடுத்து உங்கள் பெயர் மற்றும் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்  பதிவு செய்யுங்கள் அடுத்ததாக ஒரு பாஸ்வேர்டு கொடுத்து ரிஜிஸ்டர் கொடுத்து விடுங்கள்  


பிறகு   https://nvsp.in/Account/Login  அதில் உங்கள் மொபைல் எண் மற்றும் உங்கள் பாஸ்வேர்டு கொடுத்து உள் நுழையுங்கள் 


அதில்"Download e-EPIC" என்பதை கிளிக் செய்து உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் கொடுத்து சப்மிட் கொடுங்கள் அவ்வளவுதான் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை ரெடி அதனை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளுங்கள்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback