2500/- பொங்கல் பரிசுத் தொகுப்பு: டிச.26 முதல் டோக்கன்கள் விநியோகம்
அட்மின் மீடியா
0
ரூ.2,500-உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பினை அளிப்பதற்கான டோக்கன்கள் வரும் 26-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன. பரிசுத் தொகுப்பினை ஜனவரி 13-ஆம் தேதிக்குள் வழங்கி முடிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனை வழங்கிய பிறகு, அதுகுறித்த விவரம் குடும்ப அட்டைதாரா்களின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.
குடும்ப அட்டைதாரா்கள் நியாய விலைக் கடைகளில் ஒரு மீட்டா் இடைவெளியில் தனிமைப்படுத்தி பொருள்களைப் பெற வேண்டும். கட்டாயம் முகக் கவசத்தை அணிந்து வர வேண்டும்
Tags: தமிழக செய்திகள்