Breaking News

#Burevi Cyclone : இந்த 6 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று இரவு புரவி புயலாக வலுப்பெற்றது. 



இந்த புயல் வேகமாக நகர்ந்து வருவதால், இன்று மாலை அல்லது இரவு திரிகோணாமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த புயல் நாளை மறுநாள் மன்னார் வளைகுடா வரும் என்றும், அதே வலுவுடன் கன்னியாகுமரி-பாம்பன் இடையே கரையை கடக்கும் என்றும் கூறப்படுகிறது. 

இதனால் நாளை கன்னியாகுமரி திருநெல்வேலி,தூத்துக்குடி,தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிகக்கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வுமையம் அறிக்கை

http://imdchennai.gov.in/hrw.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback