Breaking News

வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா, இல்லையான்னு தெரியணுமா?: ஒரே ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்புங்க

அட்மின் மீடியா
0

வாக்காளர் பட்டியலில் உங்கள்  பெயர் உள்ளதா இல்லையா என்பதை மக்கள் தெரிந்து கொள்ள ஒரே ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி தெரிந்து கொள்ள முடியும் 

 


வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் உள்ளதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வாக்காளர்கள் 1950 என்ற எண்ணிற்கு வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். 

எஸ்.எம்.எஸ். அனுப்பினால் அந்த செல்போன் எண்ணிற்கு தேர்தல் ஆணையம் பதில் அனுப்பும்

அந்த பதிலில் வாக்காளரின் பெயர், முகவரி, வாக்குப்பதிவு மையம் உள்ளிட்டவையின் விபரம் இருக்கும். அப்பரம் என்ன உடனே எஸ்.எம்.எஸ் அனுப்புங்க

முதலில் உங்கள் மொபைல் போனில்  ECI   ஸ்பேஸ் "வாக்காளர் எண்" டைப் செய்து 1950 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்க உடனடியாக உங்கள் மொபைல் போனுக்கு  உங்கள் வாக்காளர் அடையாள அட்டை விவரம் எஸ்.எம்.எஸ். ஆக வரும்


உதாரணத்திற்க்கு: ECI xxxxxxxx to 1950

 


 Send this SMS to 1950 for getting information

1. Elector Informatioin SMS            -   ECI  "EPIC Number" 

2. Polling Station Information SMS - ECIPS  "EPIC Number" 

3. Official Information SMS            - ECICONTACT  "EPIC Number"

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback