Breaking News

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய புதிய வழிமுறைகள் என்ன?- டிஎன்பிஎஸ்சி வெளியீடு

அட்மின் மீடியா
0

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுதும் தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய புதிய வழிமுறைகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 




இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 


  • தேர்வு நாளில் காலை 9.15 மணிக்குள் தேர்வுக்கூடத்தை சென்றடைய வேண்டும்.இதற்கு முன்பு தேர்வு தொடங்கும் வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். இனி அப்படி இருக்காது. காலை 9.15 மணிக்குப் பிறகுவரும் தேர்வர்கள் தேர்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

  • விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும் கருப்பு நிற மை உடைய பந்துமுனை ball point pen பேனாவை மட்டுமே பயன்படுத்தவேண்டும். பென்சில் மற்றும் ஏனைய நிற மை பேனாக்களை பயன்படுத்தக்கூடாது.

  • விடைத்தாளில் உரிய இடங்களில் கையொப்பமிட்டு இடது கை பெருவிரல் ரேகையினை பதிக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது விடைத்தாளில் மற்ற இடங்களில் மை படாமலும் மற்றும் விடைத்தாள் எவ்வகையிலும் சேதம் அடையாமலும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

  • விடைத்தாளில் இரு இடங்களில் கையொப்பமிட்டு பெருவிரல் ரேகையை பதிவுசெய்ய வேண்டும்.

  • விடைத்தாளில் உள்ள கேள்விகளில் ஏதேனும் கேள்விக்கு விடை தெரியவில்லை என்றால் விடைத்தாளில் ‘E' என்ற வட்டத்தை கருமையாக்க வேண்டும். 

  • விடைத்தாளில் A, B, C, D, E என்று ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்று எண்ணி மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்பி கருமையாக்க வேண்டும். இந்த எண்ணிக்கை தவறாக இருந்தால்தேர்வர்கள் எடுத்த மதிப்பெண்ணில் இருந்து 5 மதிப்பெண் குறைக்கப்படும்.

  • இதற்காக ஒவ்வொரு தேர்வருக்கும் தேர்வு நேரம் முடிந்த பிறகு 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

டிஎன்பிஎஸ்சி  அதிகாரபூர்வ அறிக்கை படிக்க:

https://www.tnpsc.gov.in/static_pdf/press/56_PRESS-RELEASE.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback