Breaking News

ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் அதிரடி தள்ளுபடி

அட்மின் மீடியா
0

2021-ம் ஆண்டு நடத்த உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பை, ஜாதி வாரியாக நடத்த மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை வன்னியகுல சத்ரிய மகாஜன சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்டது



அந்த வழக்கு இன்று  மாண்புமிகு  நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.


சில அமைப்புகளால் தான் போராட்டங்கள் நடத்தப்படுவதாகவும், போராட்டங்களால் எதையும் அடைய முடியாது என்றும் ,சாதியில்லா சமுதாயத்தை நோக்கி பயணிக்கும் போது சாதி வாரி கணக்கெடுப்பு ஏன் நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சாதிவாரியாக புள்ளிவிவரங்களை சேகரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இந்திய அரசியல் சாசனத்தின்படி, மனுவில் கோரியுள்ள கோரிக்கையை ஏற்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback