துபாயில் பயன்பாட்டிற்கு வந்துள்ள இலவச கொரானா தடுப்பூசியினை யாரெல்லாம் போடலாம்!! யாரெல்லாம் போடக்கூடாது?எங்கு போடலாம்!! முழு விவரம்
துபாயில் கொரோனாவிற்கு எதிராக செயல்படும் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகள் (Pfizer-BioNTech vaccine) பெல்ஜியம் நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
மேலும், தடுப்பூசியினைப் போட்டுக்கொள்ள விரும்பும் துபாய் குடியிருப்பாளர்கள் அதற்காக முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் முன்பதிவு செய்ய வேண்டிய முறை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி குறித்த சில சந்தேகங்களுக்கு துபாய் அரசு ஊடக அலுவலகம் மற்றும் துபாய் சுகாதார ஆணையம் ஆகியவை இணைந்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளன
தடுப்பூசி எடுக்க முடியாதவர்கள்
18 வயதுக்குட்பட்ட குழந்தைகள்
கர்ப்பிணி பெண்கள்
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்
கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்கள்
நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு கொண்டவர்கள்.
வேறு எந்த தடுப்பூசி, உணவு, பொருள், மருந்து அல்லது அட்ரினலின் ஆட்டோ இன்ஜெக்டர்களுக்கு (adrenaline auto injectors) ஒவ்வாமை உடையவர்கள்.
தடுப்பூசி மையங்கள்
சபீல் ஹெல்த் சென்டர் (Za’abeel Health Centre)
அல் மிசார் ஹெல்த் சென்டர் (Al Mizhar Health Centre)
நாத் அல் ஹம்மர் ஹெல்த் சென்டர் (Nad Al Hammar Health Centre)
அல் பர்ஷா ஹெல்த் சென்டர் (Al Barsha Health Centre)
அப்-டவுன் ஆக்குபேஷனல் ஹெல்த் ஸ்க்ரீனிங் சென்டர் (Up-town Occupational Health Screening Centre)
ஹத்தா ஹாஸ்பிடல் (Hatta Hospital)
கொரோனா பாதித்து குணமடைந்தவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர் கொரோனா பாதித்த நாளில் இருந்து மூன்று மாதங்கள் கழித்து தடுப்பூசியினை போட்டுக்கொள்ளலாம்.
தடுப்பூசிக்கான முதல் டோசினை செலுத்திய பின்னர் இரண்டாவது டோஸ் 21 நாட்களுக்குப் பிறகு செலுத்தப்படும்.
Frequently asked questions and answers related to #Dubai's COVID- 19 vaccination campaign. @DHA_Dubai pic.twitter.com/sXNOqgAEuO
— Dubai Media Office (@DXBMediaOffice) December 23, 2020
Tags: வெளிநாட்டு செய்திகள்