Breaking News

கேரள உள்ளாட்சி தேர்தல்: இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அட்மின் மீடியா
0

கேரளாவில் மூன்று கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.



கேரள மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களுக்கும் கடந்த டிசம்பர் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.


கடந்த 8ம் தேதி முதல் கட்ட தேர்தலும், 

10ம் தேதி 2ம் கட்டமும், 

14ம் தேதி 3ம் கட்டமும் நடந்தது. 

இவற்றில் மொத்தம் 76.04 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 

இந்த வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது. 

இதற்காக மாநிலம் முழுவதும் 244 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

தேர்தல் முடிவுகள் நண்பகலுக்குள் முழுமையாக கிடைக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

காலை 11 மணிக்குள் கிராம பஞ்சாயத்து, மாநகாட்சி முடிவுகள் கிடைக்கும்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback