தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான புரெவி புயல், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் மாறியது. அது மேலும் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ளது.
தற்போது ராமநாதபுரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், பாம்பனில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிக்கை:
Tags: தமிழக செய்திகள்