Breaking News

அயோத்தியில் முஸ்லிம்களுக்கான 5 ஏக்கர் நிலத்தில் மசூதி: ஜன 26 குடியரசு தினத்தன்று அடிக்கல் நாட்டு விழா

அட்மின் மீடியா
0

இந்திய குடியரசு தினத்தன்று உத்திர பிரதேசத்தில் புதிய பாபர் மசூதி கட்டுவதற்காக அடிக்கல் நாட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கட்டுமானத்திற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளையின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள் 




2021 ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மசூதி கட்ட ஒதுக்கப்பட்டுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தில் அடிக்கல் நாட்டப்படும் என்று அறக்கட்டளையின் செயலாளர் அதர் உசேன் கூறியுள்ளார்

மசூதியின் சிறப்பம்சமாக, பல்துறை சிறப்பு மருத்துவமனை, சமூக சமையலறை மற்றும் நூலகம் ஆகியவை அடங்கும், இதற்கான வரைபடத்தை தலைமை கட்டிடக் கலைஞர் பேராசிரியர் எஸ் எம் அக்தர் இறுதி செய்துள்ள நிலையில் அதன் வரைபடம் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது எனவும் கூறியுள்ளார்


Source:

https://thewire.in/religion/foundation-for-ayodhya-mosque-to-be-laid-on-republic-day

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback