உலகில் மிகசிறிய செயற்கைகோள்: கண்டுபிடித்த தஞ்சாவூரை சேர்ந்த ரியாஸ்தீன்:2021-ல் விண்ணில் ஏவவுள்ளது நாசா
அட்மின் மீடியா
0
தஞ்சையைச் சேர்ந்தவர் மாணவர் ரியாஸ்தீன். அவர் கண்டுபிடித்த மிக குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோளை நாசா 2021-ல் விண்ணில் ஏவவுள்ளது.
தஞ்சை மாவட்டம் கரந்தை பகுதியை சேர்ந்தவர் ரியாஸ்தீன் பி.டெக். மெக்கட்ரானிக்ஸ் படித்து வருகிறார்.
இவர் cubes in space என்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் கலந்துகொண்டார். இந்த போட்டியில், ரியாஸ்தீன் வடிமைத்துள்ள உலகின் மிகவும் எடைகுறைவான இரு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவ தேர்வாகி உள்ளது.
விஷன் சாட் வி1 மற்றும் வி2 என பெயரிட்டுள்ள இந்த இரு செயற்கைக்கோள்களும் சுமார் 37 மில்லிமீட்டர் உயரமும், 33 கிராம் எடையும் கொண்டதாகும்.
இவை உலகிலேயே மிகவும் எடை குறைவான ஃபெம்டோ வகையை சேர்ந்த செயற்கைக்கோள்களாகும்.
Tags: தமிழக செய்திகள்