FACT CHECK: பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் டர்பன் அணிந்த வந்த இஸ்லாமியர் என பரவும் வீடியோ ! உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் விவசாய போராட்ட அக்கப்போருகள்! பிளாஸ்டிக் டர்பன் அணிந்து சிக்கிய குல்லா என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
ம்த்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விவசாயச் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டங்களையும்,
பேரணிகளையும் நடத்தி வருகின்றனர்.
அந்த போராட்டத்தில் சீக்கியர் போல் டர்பன் அணிந்த இஸ்லாமியர் என ஒரு வீடியோ வைரல் செய்யப்படுகின்றது
ஆனால் அந்த வீடியோவில் உள்ள நபர் இஸ்லாமியர் இல்லை
மேலும் அந்த வீடியோ தற்போது எடுக்கபட்ட வீடியோவும் இல்லை
அந்த வீடியோ கடந்த 29.03.2011 அன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலியில் மருத்துவர்கள் நடத்திய ஆர்பாட்டத்தில் நடந்த சம்பவம் ஆகும்
ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி