Breaking News

#BREAKING: நள்ளிரவுக்கு முன் கரை கடக்கும்: கடலூரைத் தொட்டது நிவர் புயல்

அட்மின் மீடியா
0

அதி தீவிர புயலாக மாறிய நிவரின் வெளிச்சுற்று கடலூர் மாவட்டத்தில் கரையை தொட்டது. புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டதால் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. 



மேலும், புயலின் வெளிச்சுற்று கரையை தொட்ட நிலையில் இன்னும் 6 மணி நேரத்தில் புயலின் மையப்பகுதி கரையை தொடும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

நிவர் புயல் காரணமாக சென்னையில் 40 கி.மீ முதல் 50 கி.மீ வேகத்தில் தற்போது காற்று வீசி வருகிறது. அதி தீவிர புயலாக மாறிய நிவர் தற்போது 16 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback