Breaking News

#Breaking: பள்ளிகள் திறக்கலாமா? நவ.9-ல் பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 9 ஆம் தேதி பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 


நவம்பர் 16 ஆம் தேதி முதல் பள்ளி 9ம் வகுப்பு முதல்12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று  தமிழக அரசு அறிவித்திருந்தது. 

 

இந்நிலையில் பள்ளிகள் திறப்பதற்க்கு  பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 9 ஆம் தேதி கருத்துக்கேட்பு நிகழ்ச்சி நடைபெறும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


அதன்படி, 9 - 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், அந்தந்த பள்ளிகளில் தங்களின் கருத்துக்களை கூறலாம் இந்த கூட்டம், காலை 10 மணி முதல் பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் நடைபெறும். நேரில் வரமுடியாத பெற்றோர்கள் கடிதம் மூலமாக தங்களின் கருத்துக்களை கூறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த கருத்துக்கேட்பு கூட்ட முடிவுகளின் அடிப்படையில், பள்ளிகள் திறப்பது குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback