வெளிநாடு நிதி பெறும் தொண்டு நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு
அட்மின் மீடியா
0
வெளிநாடுகளில் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிதியுதவி பெறுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
நிதியுதவி பெறுவதற்கான மத்திய அரசு கொண்டுவந்த மாற்றம்.
- வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி கோரும் தனியார் தொண்டு நிறுவனம், 3 ஆண்டுகள் செயல்பட்டதாக இருக்க வேண்டும்.
- கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ரூபாய் 15 லட்சம் நலத்திட்டங்களுக்காக செலவு செய்திருக்க வேண்டும்.
- வெளிநாட்டு நிதியுதவிகளை பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது.
- கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர் அமைப்புகள், விவசாய சங்கங்கள், வெளிநாட்டு நிதியுதவியை பெற முடியாது.
- ஒவ்வொரு தனியார் தொண்டு அமைப்பும் நிதியுதவி பெறுவதற்கு விண்ணப்பிக்கக்கூடிய விண்ணப்பிக்க தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.