Breaking News

வங்கக்கடலில் உருவானது ‘நிவர்’ புயல்! சென்னை வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக வலுப்பெற்றது இந்த புயல் நாளை 25ம் தேதி காரைக்கால் - மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.


சென்னையில் இருந்து 470 கி.மீ. தொலைவில் நிவர் புயல் சின்னம் நிலை கொண்டுள்ளது.



புதுச்சேரியில் இருந்து 440 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறவுள்ளது.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 24 மணி நேரத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Share this