Breaking News

வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புவது போல இனி பணமும் அனுப்பலாம்!

அட்மின் மீடியா
0

வாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் வாட்ஸ்அப் பே சேவைக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் இனி வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தும் நபர்கள் சுலபமாக பணத்தை மற்றவர்களுடன் பரிமாறிக்கொள்ளலாம்.



இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைவர் மார்க் பேசுகையில், "இனி சுலபமாக மெசேஜ் அனுப்புவது போல பணம் அனுப்பலாம், இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் வாட்ஸ் அப் பே பயன்படுத்தி பணம் அனுப்பலாம்." என்று தெரிவித்துள்ளார்.

பணம் அனுப்புவது மட்டுமின்றி பண பரிமாற்ற விவரங்கள், முந்தைய பரிமாற்ற தகவல்கள் உள்ளிட்டவைகளை எப்போது வேண்டுமானாலும் பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது.


 தன் டிவிட்டர் பக்கத்தில் அதிகாஅரபூர்வமாக அறிவித்தது வாட்ஸப் நிறுவனம் ஆனால் இன்னும் அப்டேட் கொடுக்கவில்லை , கூடியவிரைவில் அப்டேட் வரும் என எதிர்பார்க்கபடுகின்றது

வாட்ஸ்அப் பே அம்சத்தை இயக்குவது எப்படி?- 

 

 முன்னதாக பிளே ஸ்டோருக்கு சென்று உங்கள் வாட்ஸப்பை அப்டேட் செய்து கொள்ளுங்கள்

அடுத்துகாண்டாக்ட்டில் யாருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்- 

அடுத்து வாட்ஸ்அப் செயலியின் சாட் பாக்ஸ் ஆப்ஷனில் இருக்கும் ஷேர் ஃபைல் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்

அதில்  பேமெண்ட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

பின் அனுப்ப வேண்டிய தொகையை பதிவிட்டு யுபிஐ விவரங்களை உள்ளீடு செய்தால் பணம் அனுப்பப்பட்டு விடும் 

 

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback