சென்னையிலிருந்து 590 கிலோ மீட்டரில் 'நிவர்' புயல்! - சென்னையில் இருந்து செல்லும் 6 விரைவு ரயில்கள் சேவை ரத்து
நிவர் புயல் காரணமாக காரணமாக, தமிழகத்தில், நாளையும், நாளை மறுநாளும் ஒரு சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள், அதாவது புதன்கிழமை பிற்பகலில் சென்னை அடுத்துள்ள மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், இது அதிதீவிர புயலாக மாறி 120 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
தஞ்சாவூர் - மயிலாடுதுறை மார்க்கமாக செல்லும் 6 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்நிலையில், நிவர் புயல் காரணமாக சோழன் மற்றும் உழவன் விரைவு இரயில் வண்டிகள் இரண்டு நாட்கள் (24, 25 நவம்பர்) இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி-சென்னை இடையிலான ரயில்களும் முழுமதுவமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை-சென்னை, சென்னை-தஞ்சை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மைசூரு-மயிலாடுதுறை ரயில் சேவை நவ.24-ம் தேதி திருச்சியுடன் நிறுத்தப்படுகிறது.
மயிலாடுதுறை-மைசூரு ரயில் சேவை நவ.25-ம் தேதி திருச்சியில் நிறுத்தப்படுகிறது.
எர்ணாகுளம்-காரைக்கால் விரைவு ரயில் சேவை நவ.24-ம் தேதி திருச்சியுடன் நிறுத்தப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்