10,11,12ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியவர்களுக்கு இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்: அரசு தேர்வுகள் துறை.
அட்மின் மீடியா
0
10,11,12ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியவர்கள் இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம். அவரவர் தேர்வு எழுதிய மையங்களில் அசல் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது
இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 (அரியர்), பிளஸ்-2 துணை தேர்வுகளை மாணவர்கள் எழுதினர்.
அவ்வாறு தேர்வு எழுதிய அந்த மாணவர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியலை இன்று முதல் (17-ம் தேதி) அவர்கள் தேர்வு எழுதிய மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.
இதில், மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களுக்கு மட்டும் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிட்ட பின்னர் புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கான முறையான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.
இது தொடர்பாக மேலும் கூடுதல் விவரங்களை https://tnegadge.s3.amazonaws.com/notification/SSLC/1605526230.pdf என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்