10 ம் வகுப்பு தனிதேர்வு எழுதியவர்கள் 11 ம் வகுப்பில் சேரலாம்: பள்ளிகல்விதுறை
அட்மின் மீடியா
0
பள்ளிக் கல்வி அரசு பள்ளிகளில் 2020-21 கல்வியாண்டு மாணவர்கள் சேர்க்கை -10 ஆம் வகுப்பு துணை தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சேர்க்கைக்கு நடவடிக்கை மேற்கொள்வது - சார்பாக,
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணை தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் +1 வகுப்பு சேர்க்கைக்கு வரும் போது சில தலைமையாசிரியர்கள் சேர்க்கை 30.09.2020 அன்றுடன் முடிவுற்றது என தெரிவித்து உள்ளனர்.
இக்கல்வியாண்டில் சிறப்பு நிகழ்வாக 10ஆம் வகுப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேர்க்கைக்கு வரும்பொழுது அவர்கள் பள்ளியில் சேர்க்கை அளிக்குமாறு அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.