Breaking News

உத்யோக ஆதார் பதிவு செய்வது எப்படி? how to apply Udyog aadhar registration online..!

அட்மின் மீடியா
0
நீங்கள் செய்யும் உற்பத்தி தொழில் மற்றும் சேவை தொழில் அனைத்தையும் மத்திய அரசின் உத்யோக் ஆதார் பதிவு பெற்று தொடங்குங்கள். 
 
இந்த சான்றிதழ் இருந்தால்  பல்வேறு வகையான மானியங்கள், சலுகைகள் பெற்று தொழில் நடத்தலாம்.
 
உத்யோக் ஆதார் என்றால் என்ன:-
 
நாம் ஏதாவது சிறு குறு தொழில் துவங்கி நடத்த மத்திய அரசினால் வழங்கப்படும் 12 இலக்கங்கள் கொண்ட தனித்துவ அடையாள எண் ஆகும். 
 
உத்யோக் ஆதார் பதிவு செய்வதால் உள்ள பயன்கள்:-

உங்களது நிறுவனத்தின் பெயரில் வங்கி கணக்கு துவங்கவும்.

மானியம் பெறுவதர்க்கும்.

குறைந்த வட்டியில் கடன் பெறவும்

வரி சலுகை பெற

மின்சார கட்டணத்தில் சலுகை பெற 

மத்திய, மாநில அரசுககளின் சலுகை மற்றும் முன்னுரிமை பெற

 


தேவையான ஆவணங்கள்:-

 

ஆதார் எண், 

வங்கிக் கணக்கு எண், 

மின்னஞ்சல் முகவரி

மேலும் ஆதார் எண் மற்றும் அதனுடன் இணைத்துள்ள தொலைபேசி எண் மிகவும் அவசியம். இது இருந்தால் மட்டுமே உத்யோக் ஆதாரின் இணையபக்கத்தில் நுழைய முடியும்.

மேலும் நீங்கள் உத்யோக் ஆதாரில்  ஒருமுறை பதிவு செய்துவிட்டால்  அதில் திருத்தங்கள் ஏதும் செய்ய முடியாது எனவே ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்து சரியாக பூர்த்தி செய்து கொள்ளுங்கள்

தொழில் துவங்க உத்யோக ஆதார் பதிவு செய்வது எப்படி:-

 

  • அதில் உள்ள மூன்று லிஸ்ட்டில் உங்கள் பகுதியை தேர்ந்தெடுத்து அதில்  உங்கள் ஆதார் கார்ட் நம்பர் மற்றும் உங்கள் கம்பெனி பெயர் டைப் செய்து validate & generate OTP என்பதை கிளிக் செய்யுங்கள் உங்கள் மொபைல்க்கு வரும் OTP எண்ணினை டைப் செய்து Validate என்பதை கிளிக் செய்யுங்கள்.

 

  • அடுத்து அதில் வரும் உங்கள் தொழில் விவரங்களை சரியாக  பூர்த்தி செய்து சப்மிட் கொடுங்கள் 

 

  • அடுத்து உங்களின் உத்யோக் ஆதார் சான்றிதழ் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் .அதனை பிரிண்ட் எடுத்து வைத்துகொள்ளுங்கள் அவ்வளவுதான்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback