FACT CHECK: நபி ஸல் பெயரில் பரவும் கட்டுகதை வீடியோ உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் முகமது நபி ஸல் கனவில் வந்தார்களாம் பாகிஸ்தானியர்களின் கனவில் நபிஸல் அவர்கள் கனவில் வந்து யூதர்களை கொல்லுமாறு கட்டளை இட்டார் அப்படி சொல்லாதிருந்தால் இந்த மேடை இடிந்து விடட்டும் என்கிறார்.உடனே மேடை இடிகிறது இப்படி ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
தற்போது சமூக வலைதளங்களில் மிகவேகமாக
இப்படி ஒரு வதந்தி பரவுகிறது இதில் துளியும் உண்மையில்லை
அந்த வீடியோவினை யாரோ எடிட் செய்து பொய்யான கற்பனை கதையை குரலாக கொடுத்து வெளியிட்டுள்ளார்கள்
அந்த சம்பவம் பாகிஸ்தானில் கடந்த 18.07.2018 அன்று நடந்தது
அது ஒரு அரசியல் கூட்டம் அதில் ஒருவர்
மேடை சரிந்து விழும் முன்பு ஜமாத்தி இஸ்லாமிய பார்ட்டி சார்பாக உங்கள் அனைவரையும் வரவேற்கின்றேன் என்று கூறுகின்றார்.
மேலும் அதில் அவர் நபிஸல் பெயரையோ அவர் கனவில் வந்தார் என்றோ கூறவில்லை
முழு வீடியோவை காண வீடியோ லிங்க்
https://m.facebook.com/story.php?story_fbid=2144767715565004&id=145097112198751&sfnsn=wiwspwa&extid=xGaukq8XcaW69VoU&d=w&vh=e
https://m.facebook.com/story.php?story_fbid=2144767715565004&id=145097112198751&sfnsn=wiwspwa&extid=xGaukq8XcaW69VoU&d=w&vh=e
எனவே மார்க்கத்தை உண்மைபடுத்துவதாக நினைத்து கேள்விபட்டவைகளை பரப்பி விடாதீர்கள்.
இப்படி மார்க்கத்தின் பெயரில் பொய்யை பரப்பினால் மறுமையில் தண்டனை தான் கிடைக்கும்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
மேலும் 2018 ம் ஆண்டே இந்த செய்தி பரவியது அப்போதும் அட்மின் மீடியா வெளியிட்ட செய்தி
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி