இனி அமேசான் ஆப் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்
ஐ.ஆர்.சி.டி.சியுடன் இணைந்து ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் சேவையை தொடங்கியுள்ள அமேசான்!
அமேசான் தற்போது ஆன்லைன் வர்த்தகம் மட்டும் இல்லாமல் உணவு வழங்கும் சேவை, பணப்பறிமாற்றம் ,கேஸ் முன்பதிவு, ரீசார்ஜ்உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் ஐ.ஆர்.சி.டி.சியுடன் இணைந்து ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் சேவையையும் அமேசான் தற்போது தொடங்கியுள்ளது.
அமேசான் ஆப்பில் த்ற்போது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்லலாம்
அமேசான் ஆப்பில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய
முதலில் உங்கள் அமேசான் ஆப்பில் அமேசான் பே பக்கத்துக்கு செல்லுங்கள்
அடுத்து அதில் ரயில் டிக்கெட் என்பதை செலக்ட் செய்யுங்கள்
உங்கள் பயனவிவரத்தை குறிபிட்டு டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்
மேலும் வாடிக்கையாளார்கள் அமேசான் பே அல்லது மற்ற டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறைகளிலும் கட்டணங்களை செலுத்தலாம்.
அமேசான் ஆப் மூலம் முதல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 10% வரை கேஸ்பேக் ஆஃப்பர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்