இனி பப்ஜி கேம் விளையாட முடியாது: பப்ஜி விளையாட்டிற்கு நிரந்தரத் தடை
அட்மின் மீடியா
0
இந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பப்ஜியை ஏற்கெனவே பதிவிறக்கம் செய்தவர்களும் இனி பயன்படுத்த முடியாது.
சீன எல்லைப் பிரச்னை காரணமாக டிக்டாக், பப்ஜி உள்ளிட்ட செயலிகளுக்குத் தடை விதித்தது
அதன் பின் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பப்ஜி நீக்கப்பட்டது. ஆனால் முன்னதாக மொபைலில் பப்ஜி கேம் வைத்து இருந்தவர்கள் விளையாடி வந்தனர்
ஆனால் இன்று முதல் ஏற்கெனவே பப்ஜி விளையாட்டை பதிவிறக்கம் செய்தவர்களும் பயன்படுத்த முடியாது என்றும் பப்ஜிக்கு இந்தியாவில் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது